periyarism

Posted by Jagadeesh VP | Posted in ,

பெரியாரோட சிறப்பு அல்லது நுட்பம் என்பது, இரண்டாயிரம் ஆண்டுகளாக எல்லோரும் கவனிச்சிக்கிட்டிருந்த ஒரு செய்தியை அதுவரையாரும் பார்க்காத கண்ணோட்டத்தில் பார்த்தது.
அதுக்கு ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால், குசேலன் கதையை சொல்லலாம்.
சமீபத்தில் வந்த குசேலன் கதையில்லை. ஒரியஜனல் குசேலன்.
ரஜினியின் குசேலன் படத்தை திரையிட்ட தியேட்டர் அதிபர்களில் இருந்து, திருட்டு வி.சி.டி போட்டவர்கள்வரை எல்லாரையும் குசேலனாக மாத்திடுச்சாம் இந்த குசேலன்.
ஆனால் அந்த குசேலன், 24 குழந்தைகளை பெற்றதால் வறுமையில் வாடுகிறான். அதனால் தன் நண்பன் கண்ணனைப் பார்த்து உதவி கேட்க போகிறான். கண்ணன் அவனுக்கு உதவி செய்கிறான் என்பது கதை.
24 குழந்தைகள் என்பது வறுமையை காட்டுவதற்காக புனையப்பட்ட திரைக்கதை.
பெரியார் கேட்டார், “வருடத்திற்கு ஒரு பிள்ளை என்ற வீதம், பெற்றிருந்தாலும் நான்கு பிள்ளைகள் 20 வயதுக்கு மேல் இருக்கும். தோளுக்கு மேல் வளர்ந்த தடிமாடு பிள்ளைகளை வைத்துக் கொண்டு ஒருவன் பிச்சை எடுக்கிறான் என்றால் அவன் யோக்கியதை என்ன? அவனுக்கு பிச்சை கொடுக்கிறானே அவனுடைய யோக்கியதை என்ன? பாரப்பனர்கள் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் உழைத்து சாப்பிட மாட்டர்கள். என்பதற்கு இந்தக் கதையே சாட்சி”
இந்த சிந்தனை முறையை பெரியார்தான் துவக்கி வைக்கிறார். பல தமிழறிஞர்களுக்கும் ஒரு விஷயத்தை எப்படி பார்ப்பது? என்பதை பெரியார்தான் சொல்லித்தருகிறார்.
ஆயிரம் ஆண்டுகளாக யாருக்கும் தோன்றாத சிந்தனைதான் பெரியாரின் சிந்தனை முறை….
 
I got this from http://mathimaran.wordpress.com

Comments (0)

Post a Comment